டி20 கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த இளைஞர்: காதலை வெளிப்படுத்தி காதலியை தட்டி சென்றார்...! வைரல் வீடியோ

டி20 கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த இளைஞர்: காதலை வெளிப்படுத்தி காதலியை தட்டி சென்றார்...! வைரல் வீடியோ
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று சிட்னி மைதானத்தில் மோதின.

இந்திய கிரிக்கெட் அணி இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து 179 ரன்களை சேர்த்தது. அந்த இலக்கை தடுமாற்றத்துடன் விரட்டிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. அதனால், 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் பார்வையாளர்களை கவர்ந்திருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் தனது தோழி மட்டுமல்லாது மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள், போட்டியை டிவி மற்றும் மொபைல் போன் வழியாக பார்த்துக் கொண்டிருந்தவர்களின் இதயங்களை இளைஞர் ஒருவர் வென்றுள்ளார்.

பார்வையாளர் மாடத்தில் இருந்த அவர் தனது தோழியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அதற்கென ஒரு மோதிரத்தையும் தன் கையோடு அவர் கொண்டு வந்துள்ளார். அதை கொடுத்து தனது காதலை தெரிவித்துள்ளார் அவர். காதலை அவரது தோழி ஏற்க விரல்களில் அந்த மோதிரத்தை மாட்டியும் விட்டுள்ளார். இது நெதர்லாந்து அணி பேட் செய்த போது ஏழாவது ஓவரில் நடந்துள்ளது.

இந்த வீடியோவை ஐசிசி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளது. இதையடுத்து இது வைரலாக பரவி வருகிறது. காதல் என்றாலே ஒருவரை ஒருவர் இம்ப்ரஸ் செய்வது அவசியமான ஒன்றாக அமைந்துவிடுகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com