தற்போதுள்ள இந்திய அணியை எங்களால் 3 நாட்களுக்குள் வீழ்த்த முடியும் - இலங்கை முன்னாள் கேப்டன்

தற்போதுள்ள இந்திய அணியை 1996-ல் உலகக்கோப்பையை வென்ற இலங்கை மூன்று நாட்களில் தோற்கடிக்கும் என்று அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள இந்திய அணியை எங்களால் 3 நாட்களுக்குள் வீழ்த்த முடியும் - இலங்கை முன்னாள் கேப்டன்
Published on

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி தற்சமயத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட்வாஷ் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வி என டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறது. இந்த தோல்விகளின் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் 1996-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற தனது தலைமையிலான இலங்கை அணி தற்சமயத்தில் உள்ள இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 நாட்களுக்குள் அதுவும் இந்தியாவிலேயே வைத்து வீழ்த்தும் என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "நான் உங்களிடம் நேரடியாக சொல்கிறேன். சமிந்தா வாஸ், முரளிதரன் போன்ற பவுலர்களைக் கொண்டிருந்த என்னுடைய இலங்கை அணி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 3 நாட்களில் வீழ்த்திவிடும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com