மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா....!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா....!
Published on

மவுண்ட் மவுங்கானு,

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதின. மழையால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.

தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார். இதனையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

முதலில் நிதானமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் சொற்ப ரன்களிலே அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

தொடக்க வீராங்கனை டியான்ட்ரா டாட்டின்(34), ஹேலி மேத்யூஸ்(34), டெய்லர் (48) ஆகியோர் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை எடுத்தனர்.

நாளை மற்றோரு அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏப்ரல் 3 தேதி நடக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடம் பலபரீட்சை நடத்தும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com