நீங்கள் உம்ரான் மாலிக்கோ, சிராஜோ அல்ல...இன்னும் முன்னேற வேண்டும் - அர்ஷ்தீப் சிங்கை சாடிய இந்திய முன்னாள் வீரர்...!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் தனது கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கினார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் கடுமையாக போராடி வென்று சமன் செய்துள்ளது.

இந்நிலையில் உம்ரான் மாலிக், சிராஜ் போல் அர்ஷ்தீப்சிங்கின் வேகம் இல்லை என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அதனால் சில வேரியேஷன்களை கற்றுக் கொள்வதுடன் அடிப்படையை பின்பற்றினாலே நோ-பால் வீசுவதை தவிர்த்து விடலாம் என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

அவருடைய புள்ளி விவரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. அது முக்கிய நேரத்தில் உங்களது வெற்றியை எதிரணிக்கு தாரை வார்க்கலாம். முந்தைய போட்டியிலும் அதுதான் நடந்தது. இதை தவிர்க்க அடிப்படையை சரியாக பின்பற்றுங்கள்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளும் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகியன புதிய பந்தில் நன்றாக வேலை செய்யும். ஆனால் இந்திய துணை கண்டத்தில் பெரும்பாலும் பிளாட்டான பிட்ச்கள் தான் இருக்கும். அதில் நீங்கள் மெதுவான பந்துகள் அல்லது ஸ்லோயர் பவுன்சர்கள் போன்றவற்றை வீச வேண்டும்.

மேலும் சில வேரியேஷன் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவரிடம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அளவுக்கு வேகமில்லை. எனவே அவர் சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும். ஏனெனில் அவர் முகமது சிராஜ் அல்லது உம்ரான் மாலிக் கிடையாது. எனவே அடிப்படையை எளிமையாக பின்பற்ற வேண்டிய அர்ஷ்தீப்சிங் நோ-பால் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு கம்பீர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com