

புதுடெல்லி,
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் தகவலை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இதை சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆறுதலான செய்தி, நான் நன்றாக உள்ளேன், கொரோனாவில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், நான் மீண்டும் கால்பந்து களத்திற்கு விரைவில் திரும்புவேன். அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்க அனைவருக்கும் நினைவூட்டுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை என்றும் அந்த பதிவில் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார். இதையடுத்து சுனில் சேத்ரி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.