

பிரீமியர் லீக் கால்பந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் - சவுதாம்ப்டன் அணிகள் மோதின .
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அர்செனல் 21 வது நிமிடத்தில் அர்செனல் அணியின் லகாசிட்டோ மற்றும் மார்ட்டின் டிகார்ட் 27 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர் .இதனால் அர்செனல் அணி 2-0 என முன்னிலை பெற்றது .
தொடர்ந்து இரண்டாவதி பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்செனல் அணியின் கேப்ரியல் 62 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் .இதனால் 3-0 என அர்செனல் அணி வெற்றி பெற்றது. சவுதாம்ப்டன் அணி கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.