

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய ஏழு போட்டிகளை அடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஹெப்டத்லான் வீராங்கனையான ஸ்வப்னா பர்மன், 6 விரல்களை உடைய கால்களுக்கு ஏற்ற காலணி இல்லாமல் அவதியுற்றார். வழக்கத்துக்கு மாறான கால் பாதத்தால் அவருக்கு காலில் எப்போதும் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த வலியை பொறுத்துக்கொண்டு, சொற்ப அளவில் கிடைத்த விளையாட்டு ஊக்கத்தொகையாலேயே இந்த அளவுக்கு உயரம் தொட்டிருக்கிறார் ஸ்வப்னா பர்மன்.