ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்தியர்கள் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்தியர்கள் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் 2110, 2116 என்ற நேர் செட்டில், போட்டித் தரநிலையில் 4வது இடம் வகித்த சங் ஜி ஹியூனை (தென்கொரியா) துவம்சம் செய்தார். 38 நிமிடங்களில் வெற்றியை ருசித்த சாய்னா 2வது சுற்றில் மலேசியாவின் சோனியா செயாவுடன் மோதுகிறார்.

மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தன்னை எதிர்த்த இந்தோனேஷிய ஓபன் சாம்பியனான சயாகா சட்டோவின் (ஜப்பான்) சவாலை முடிவுக்கு கொண்டு 1 மணி 5 நிமிடங்கள் மல்லுகட்ட வேண்டி இருந்தது. திரிலிங்கான இந்த மோதலில் சிந்து 2117, 1421, 2118 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். பின்னர் சிந்து கூறுகையில், 2வது செட்டிலேயே ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். இரண்டாவது செட்டில் தொடக்கத்தில் 1311 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தேன். அதன் பிறகு நிறைய தவறுகள் செய்ததால் அந்த செட்டை இழந்ததுடன் பதற்றத்திற்கு உள்ளானேன். 3வது செட்டுக்கு முன்பாக பயிற்சியாளர் என்னிடம் 2வது செட் பற்றியே நினைத்துக்கொண்டிருக்காதே. அது முடிந்து போய் விட்டது. மூன்றாவது செட்டுக்கு முழுவீச்சில் தயாராகு என்று அறிவுரை வழங்கினார். அதன் பிறகு எனது பாணியில் விளையாடி 3வது செட்டை கைப்பற்றினேன் என்றார்.

உலகின் 2ம் நிலை வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஸ்பெயினின் கரோலின் மரின் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 12ம் நிலை வீராங்கனை ஜப்பானின் நோஜோமி ஒகுஹரா 2112, 2119 என்ற நேர் செட்டில் வெளியேற்றினார்.

ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டத்தில் இந்திய முன்னணி வீரரும், இந்தோனேஷிய ஓபன் சாம்பியனுமான ஸ்ரீகாந்த் 2113, 2116 என்ற நேர் செட்டில் கான் சாவ் யுவை (சீனத்தைபே) எளிதில் வென்றார். இந்திய இளம் வீரர் சாய் பிரனீத் தனது முதல் தடையை கடக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது. அவர் முதல் சுற்றில் 1021, 2112, 2110 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் டாமி சுகியர்டோவை சாய்த்தார்.

தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டிய காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் காஷ்யப் முதல் சுற்றில் 1821, 2114, 1521 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீரர் தென்கொரியாவின் சன் வான் ஹோவுடன் வீழ்ந்தார். 2வது சுற்றில் சன் வான் ஹோவ், ஸ்ரீகாந்த்தை எதிர்கொள்ள இருக்கிறார். எச்.எஸ்.பிரனாய், அஜய் ஜெயராம், சிரில் வர்மா ஆகிய இந்தியர்களும் முதல் சுற்றோடு நடையை கட்டினர்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அஸ்வினிசிக்கி ரெட்டி ஜோடி 2111, 2113 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் ஹிசுயான் யு வென்டி ஜெனிபர் டாம் இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

அதே சமயம் கலப்பு இரட்டையரில் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டியுடன் கைகோர்த்து களம் இறங்கிய அஸ்வினிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவர்கள் முதல் சுற்றில் 1321, 1721 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின் லீ சன் சாவ் ஹோய் வா இணையிடம் தோல்வியை தழுவினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com