

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளை சீரிய முறையில் தயார்படுத்துவதற்காக, பயிற்சி அளிப்பதில் மிகுந்த அனுபவசாலியான இந்தோனேஷியாவைச் சேர்ந்த அகுஸ் வி சான்டோசோ பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய்னா உள்ளிட்ட இந்திய ஒற்றையர் பிரிவு வீரர், வீராங்கனைகளுடன் இணைந்து பணியாற்றுவார். அவரது நியமனத்துக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவருக்கு மாத ஊதியம் ரூ.5 லட்சம் ஆகும்.