பிரெஞ்ச் பார்முலா1 கார்பந்தயம் ரத்து

பிரெஞ்ச் பார்முலா1 கார்பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரெஞ்ச் பார்முலா1 கார்பந்தயம் ரத்து
Published on

பாரீஸ்,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தை உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா அச்சத்தால் இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் இன்னும் தொடங்கவில்லை. ஏற்கனவே 2 சுற்று ரத்தானது. 7 சுற்று தள்ளிவைக்கப்பட்டது. இந்த பாதிப்பு பட்டியலில் தற்போது பிரெஞ்ச் கிராண்ட்பிரியும் இணைந்துள்ளது.

பார்முலா1 கார்பந்தயத்தின் 10-வது சுற்றான பிரெஞ்ச் கிராண்ட்பிரி பந்தயம் லீ காஸ்ட்லெட் ஓடுதளத்தில் ஜூன் 28-ந்தேதி நடக்க இருந்தது. பிரான்சில் கொரோனா வைரசுக்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அங்கு ஜூலை 2-வது வாரம் வரை பெரிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடையும், பயணக்கட்டுப்பாடுகளும் அந்த நாட்டு அரசு விதித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி பிரெஞ்ச் பார்முலா1 கார்பந்தயம் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். இதற்கிடையே ஜூலை 19-ந்தேதி சில்வர்ஸ்டோனில் பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயம் ரசிகர்கள் இன்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com