இந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி
Published on

புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 218, 2113 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் முக்தா அக்ரியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 2116, 1821, 2119 என்ற செட் கணக்கில் வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) போராடி தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சுபாங்கர் தேவ் 1421, 2220, 2111 என்ற செட் கணக்கில் 9ம் நிலை வீரர் டாமி சுகியர்டோவுக்கு (இந்தோனேஷியா) அதிர்ச்சி அளித்தார். சாய் பிரனீத், சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com