உலக ஜூனியர் தடகளத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்...!

உலக ஜூனியர் தடகளத்தில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.
Image Courtesy: Athletics Federation of India
Image Courtesy: Athletics Federation of India
Published on

கலி,

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்டோர்) போட்டி கொலம்பியாவின் கலி நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பரத் ஸ்ரீதர், பிரியா மோகன், கபில், ருபால் சவுத்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 17.76 வினாடிகளில் இலக்கை கடந்து தங்களது முந்தைய ஆசிய சாதனையை தகர்த்து, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

இதில் பரத் ஸ்ரீதர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். 3 நிமிடம் 17.69 வினாடிகளில் இலக்கை எட்டிய அமெரிக்கா தங்கப்பதக்கம் பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com