

பாசெல்,
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்து பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் பி வி சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் ஜயர்ஸ்பெல்ட்டை 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த போட்டியில், அவர் சீனாவின் நெஸ்லியான் இஜிட்டை எதிர்கொள்ள உள்ளார்.
மேலும், பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா- என் சீக்கி ரெட்டி ஜோடி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர்- ஜென்ஜிரா ஸ்டாடெல்மான் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய இணை வெற்றி பெற்றது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் எம்ஆர் அர்ஜுன் - துருவ் கபிலா ஜோடி, இந்தோனேஷியாவின் பஜர் அல்பியான் - முகமது ரியான் ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 19-21, 13-21 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்தனர்.