ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி

ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி.
ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி
Published on

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தங்கப்பதக்கம் கைப்பற்றி வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா, பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலப்பதக்கம் பெற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சமும் ஒலிம்பிக் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. ஆண்கள் ஆக்கியில் வெண்கலம் வென்ற வீரர்கள் தலா ரூ.10 லட்சம் வீதம் பெற்றனர். மேலும், பதக்கம் வென்றவர்கள் சார்ந்த தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் சார்பில் தலா ரூ.30 லட்சம் தனியாக வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளோரை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தும் திட்டத்தில் மேலும் பல வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு பலன் பெறுவார்கள் என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்குக்கு பிறகு இது போன்ற நிகழ்ச்சி நடக்கும் போது, இங்கு இருப்பதற்கே இடமில்லாத அளவுக்கு பதக்கம் வென்றவர்கள் நிரம்பி வழிவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com