துளிகள்

முறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.
துளிகள்
Published on

* பாகிஸ்தான் அணி நெருக்கடியில் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டது. உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் கூறியுள்ளார்.

* முறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது. நிர்வாக பணிகளை கவனிக்க இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது.

* பார்முலா1 கார்பந்தயத்தில் 8-வது சுற்றான பிரெஞ்ச் கிராண்ட்பிரி பந்தயம் லீ காஸ்ட்லெட் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று நடந்த தகுதி சுற்றில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவில் ஹாமில்டன் வெற்றி பெற்றார். இன்றைய பிரதான போட்டியில் அவரது கார் முதல் வரிசையில் இருந்து புறப்படும்.

* உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 233 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 212 ரன்களில் ஆல்-அவுட் ஆகி தோற்றது. ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (82 ரன், 7 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்றும் பலன் இல்லை. தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், இலக்கை விரட்டும் போது பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம். வலுவான பார்ட்னர்ஷிப் அமைப்பதில் நாங்கள் தடுமாறிவிட்டோம். இது தான் தோல்விக்கு முக்கிய காரணமாகும். ஒரு சில வீரர்கள் நன்றாக ஆடினாலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. வெற்றிக்கு இலங்கை தகுதியான அணி என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com