

சென்னை,
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் ரஷிய வீரரான இயான் நிமோம்னியாட்சியுடன் மோத இருக்கிறார்.
இந்த போட்டியில், 5 முறை உலக சாம்பியனான சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் வர்ணனையாளராக பணியாற்ற இருக்கிறார்.
இந்த பணி மிகவும் வேடிக்கையானதாக இருக்கப் போகிறது. அந்த பணியை செய்ய ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், வர்ணனையாளராக செல்வதால் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு, விளையாடும் பதட்டம் இல்லாமல் செல்ல இருக்கிறேன். செஸ் போட்டியின் ரசிகனான எனக்கு நிச்சயம் இந்த போட்டி சிறந்த போட்டியாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.