கொரோனா அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான 134-வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்திலும் வேகமாக பரவுவதால் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு விம்பிள்டனை ரத்து செய்வதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த போட்டியை ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானத்தில் நடத்தவோ அல்லது தள்ளிவைக்கப்படவோ சாத்தியமில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே கூறி விட்டனர். நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதற்கு முன்பு முதலாவது மற்றும் 2-வது உலகப்போரின் போது ரத்து செய்யப்பட்டது. அதாவது 1945-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டனை நடத்த முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது. இதனால் சாம்பியன்கள் ஜோகோவிச், பெடரர், செரீனா வில்லியம்ஸ், ஹாலெப் போன்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com