லாரஸ் உலக திருப்புமுனை விருதை வென்றார் எம்மா ரடுகானு- நீரஜ் சோப்ராவுக்கு ஏமாற்றம்

லாரஸ் விருதுக்கு இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

ஸ்பெயின்,

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ரடுகானு.19 வயதே ஆன எம்மா ரடுகானு கனடாவில் பிறந்தவர். ஆனால் சிறு வயது முதலே பிரிட்டன் நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார்.

தகுதி சுற்றின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற இவர் அந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டியில் பட்டம் வென்றார். இந்த நிலையில் உலகின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான லாரஸ் விருதை எம்மா ரடுகானு பெற்றுள்ளார். லாரஸ் உலக திருப்புமுனை விருது பிரிவில் எம்மா ரடுகானுவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான லாரஸ் உலக திருப்புமுனை விருதுக்கு இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

அவருடன் சேர்ந்து எம்மா ரடுகானு, டேனில் மெட்வெடேவ், பெட்ரி, யூலிமர் ரோஜாஸ், அரியர்னே டிட்மஸ் ஆகியோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com