

மியாமி,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா, மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு உலகின் நம்பர் 1 வீராங்கனையாக முன்னேறியுள்ள போலந்து நாட்டின் வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் கிவிட்டோவாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். மேலும் அவர் நாளை நடைபெறவுள்ள அரைஇறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோத உள்ளார்.