தரவரிசையில் முதலிடம்.. புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தரவரிசையில் முதலிடம்.. புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
Published on

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது.

இந்நிலையில் 'விக்ரம்' திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்ட, இந்தியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் தரவரிசை பட்டியலை ஐஎம்டிபி என்கிற திரைப்படங்களை மதிப்பீடு செய்யும் இணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 8.6 மதிப்பீடு பெற்று முதலிடைத்தை பிடித்துள்ளது. இது கமல் ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com