‘குக் வித் கோமாளி 3’ போட்டியாளர்கள் யார்? - வெளியான பட்டியல்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி வெளியாகிறது இதில் இடம்பெறும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
‘குக் வித் கோமாளி 3’ போட்டியாளர்கள் யார்? - வெளியான பட்டியல்
Published on

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி. கலகலப்பு நிறைந்த இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார். அதேபோல் பவித்ரா, தர்ஷா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடிக்கின்றனர். புகழ், பாலா ஆகியோர் காமெடியனாக நடித்து வருகின்றனர். அஸ்வின் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் ஜனவரி 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி 3-வது சீசனின் புரோமொ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இடம்பெறும் போட்டியாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்ரியன், அசுரன் ராட்சசன் போன்ற படங்களில் நடித்த அம்மு அபிராமி.

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் அறிமுகமான வித்யுல்லேகா ராமன், தும்பா கனா போன்ற படங்களில் நடித்த தர்ஷன்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com