அம்ருதா பட்னாவிஸ் பற்றி முகநூலில் அவதூறு பதிவிட்ட பெண் கைது

முகநூலில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பற்றி முகநூலில் அவதூறு பதிவிட்ட பெண் கைது
அம்ருதா பட்னாவிஸ் பற்றி முகநூலில் அவதூறு பதிவிட்ட பெண் கைது
Published on

தானே,

முகநூலில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இது பற்றி அறிந்த அம்ருதா தன் மீது அவதூறாக பதிவேற்றம் செய்த அடையாளம் தெரியாத நபர் மீது சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் முகநூலில் போலி கணக்கு ஒன்று உருவாக்கி அவதூறு பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதனை பதிவேற்றம் செய்தவர் தானேயை சேர்ந்த பெண் என அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com