குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 26 March 2017 7:33 AM GMT (Updated: 26 March 2017 7:33 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, தமன்னா நடிக்கும் பெரும்பாலான படங்களில், அவர் மழையில் நனைவது போன்ற பாடல் காட்சி இடம் பெறுகிறதே... அவரே விரும்பி நடிக்கிறாரா, டைரக்டர்கள் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கிறார்களா? (வி.கஜேந்திரன், சேலம்)

தமன்னாவை எந்த டைரக்டரும் கட்டாயப்படுத்துவதில்லை. அவருடைய விருப்பத்தின் பேரிலேயே மழை பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றனவாம்!

***

தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ படம் எப்போது திரைக்கு வரும்? (மதன் குமார் விஜய், சென்னை–28)

‘பவர் பாண்டி,’ தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 14–ந் தேதி திரைக்கு வர இருக்கிறது!

***

குருவியாரே, அனுஷ்கா நடனம் ஆடுவதற்கு ரொம்ப சிரமப்படுகிறாராமே... அது உண்மையா? (எம்.ராஜதுரை, கோவை)

உண்மைதான். உடம்பு குண்டாகி எடை கூடி விட்டதால், ஆட முடியாமல் அனுஷ்கா அவஸ்தைப்படுகிறாராம்!

***

போலீஸ் வேடங்களில் அதிக படங்களில் நடித்தவர்களில் சத்யராஜும் ஒருவர். அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து அதிக நாட்கள் ஓடிய படம் எது? (வெ.தமிழரசன், பொள்ளாச்சி)

சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து அதிக நாட்கள் ஓடிய படம், ‘வால்டர் வெற்றிவேல்!’

***

குருவியாரே, முத்த காட்சியை படமாக்கும்போது அதிக ‘டேக்’ எடுத்தால் சந்தோ‌ஷப்படுபவர் கதாநாயகனா, கதாநாயகியா? (டி.அருள்ராஜ், கம்பம்)

கதாநாயகி அழகாக இருந்தால் கதாநாயகனும், கதாநாயகன் அழகாக இருந்தால் கதாநாயகியும்...!

***

விஜய் சேதுபதி நடிக்கும் ‘கருப்பன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடிப்பவர் யார்? (கே.செல்வசிங், திருச்சி)

‘கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிப்பவர், தான்யா. இவர், மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி!

***

குருவியாரே, சினிமாவுக்காக நடிகர் கார்த்தி செய்த தியாகங்கள் என்ன? (பி.கோபாலகிருஷ்ணன், வேடசந்தூர்)

கார்த்தி, என்ஜினீயரிங் படித்தவர். படிப்பை தியாகம் செய்து விட்டுத்தான் அவர் சினிமாவுக்கு வந்தார். சமீபத்தில் அவர் செய்த தியாகம், மீசையை இழந்தது! ‘காற்று வெளியிடை’ படத்தில் அவர் மீசை இல்லாமல் நடித்து இருக்கிறார்!

***

கவுண்டமணி, வடிவேல் ஆகிய இரண்டு பேரில் அதிக சம்பளம் வாங்கியவர் யார்? (ஆர்.புவனா, பெங்களூரு)

கவுண்டமணி, லட்சங்களில் சம்பளம் வாங்கினார். அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம், ரூ.40 லட்சம்! வடிவேல், கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். அவருடைய அதிகபட்ச சம்பளம், ரூ.10 கோடி!

***

குருவியாரே, நிக்கி கல்ராணியை பார்த்து சில கதாநாயகர்கள் பயந்து மிரண்டு ஓடுகிறார்களாமே, ஏன்? (எம்.சுப்புராஜ், பெருந்துறை)

அவர் பேய் வேடத்தில் நடித்தது ஒரு காரணம். ‘‘அண்ணா’’ என்று அழைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது இன்னொரு காரணம்!

***

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ பேய் படமா, நகைச்சுவை படமா? (இரா.சிவநேசன், மதுரை)

திகில் கலந்த நகைச்சுவை படம்!

***

குருவியாரே, விஜயகாந்த் நடித்து அதிக நாட்கள் ஓடிய 7 திரைப்படங்கள் என்னென்ன? (பி.மகாராஜன், கடலூர்)

வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், நூறாவது நாள், அம்மன் கோவில் கிழக்காலே, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், வானத்தைப்போல...!

***

எம்.ஜி.ஆருடன் தேவிகா இணைந்து நடித்த படம் எது, அந்த படத்தை தயாரித்தவர் யார்? (ஏ.பிலால் சம்சுதீன், அமானியாநகர்)

எம்.ஜி.ஆர்–தேவிகா ஜோடியாக நடித்த ஒரே படம், ‘ஆனந்த ஜோதி.’ அந்த படத்தை தயாரித்தவர், மறைந்த வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா!

***

குருவியாரே, கேத்தரின் தெரசாவுக்கு எது அழகு? (எம்.சூர்யா, கோபிச்செட்டிப்பாளையம்)

வசீகர சிரிப்பை கொண்ட அவர் முகமே அழகு!

***

பாவனா பாலியல் பலாத்கார பிரச்சினை தமிழ் திரையுலகில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது? (வெ.கஸ்தூரி ரங்கன், புதுச்சேரி)

நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்ற பிரபல நாயகிகள் தனியாக காரில் செல்ல பயப்படுகிறார்களாம்!

***

குருவியாரே, அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்,’ திகில் படமா? எப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட படம் அது? (வி.செந்தில்குமார், காட்பாடி)

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்,’ ஒரு குற்ற பின்னணியில் நடக்கும் சம்பவங்களை கருவாக கொண்ட படம். பெரும்பகுதி காட்சிகள் இரவில் படமாக்கப்படுகின்றன!

***

திருமணம் செய்து கொள்ளும் கதாநாயகிகள் பெரும்பாலும் சினிமாவை விட்டு விலகி விடுவதாக அறிவிப்பார்கள். சமந்தா மட்டும் தொடர்ந்து நடிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறாரே? (மா.செல்வகுமார், நாகர்கோவில்)

சமந்தாவுக்கு கலையார்வம் அதிகம். கலை மீது அவர் கொண்ட அபரிமிதமான மோகத்தால், அதை விட்டு விலகிப்போக மனம் இல்லையாம்!

***

குருவியாரே, கீர்த்தி சுரேஷ் படுகவர்ச்சியாக ஒரு படத்தில் நடிப்பாரா? (எஸ்.ஞானவேல், திருப்பூர்)

மார்க்கெட் விழுந்து விட்டால், சில நடிகைகள் கவர்ச்சி ரூட்டுக்கு மாறுவார்கள். கீர்த்தி சுரேஷ் மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

***

‘‘மன்னிக்க வேண்டுகிறேன்...உந்தன் ஆசையை தூண்டுகிறேன்...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடலை பாடியவர்கள் யார்? பாடல் காட்சியில் நடித்தவர்கள் யார்? (ஆர்.மலைச்சாமி, ஈரோடு)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘இரு மலர்கள்.’ பாடியவர்கள்: டி.எம்.சவுந்தரராஜன்–பி.சுசீலா. நடித்தவர்கள்: ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்–கே.ஆர்.விஜயா!

***

குருவியாரே, விக்ரம்–தமன்னா ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன? அந்த படத்தை இயக்குபவர் யார்? (பி.விஜய், கூடுவாஞ்சேரி)

விக்ரம்–தமன்னா ஜோடியாக நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அந்த படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். இவர், ‘வாலு’ படத்தை இயக்கியவர்!

***

நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் இப்போது எத்தனை படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்? (ஏ.ஜி.முகமது தவ்பீக், மேலப்பாளையம்)

இமான் அண்ணாச்சியின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் உள்ள திருவழுதி நாடார் விளை. அவர் இப்போது, பக்கா, நேத்ரா, குரு உச்சத்துல இருக்காரு, ராஜாவும் 5 கூஜாவும் உள்பட 14 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்!

***

Next Story