இந்தி படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியானார்


இந்தி படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியானார்
x
தினத்தந்தி 16 Nov 2017 10:42 PM GMT (Updated: 16 Nov 2017 10:41 PM GMT)

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

மும்பை,

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

ஜான்விக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியில் தயாராகும் ‘தடக்’ என்ற படத்தில் ஜான்வி கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் கதாநாயகனாக இஷான் கட்டர் நடிக்கிறார். இந்த படத்தை ஷசாங்க் கைதான் இயக்குகிறார். டைரக்டர் கரண் ஜோகர் தயாரிக்கிறார். ஆணவ கொலைகளுக்கு எதிராக மராத்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சாய்ராட் படத்தின் இந்தி ‘ரீமேக்’ ஆக ‘தடக்’ படம் தயாராகிறது.

சாய்ராட் படம் கன்னடத்தில் ‘ரீமேக்’ செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளிலும் தயாராக உள்ளது. தடக் படத்தில் கதாநாயகியான ஜான்வியின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அடுத்த வருடம் ஜூலை மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். 

Next Story