முன்னோட்டம்
மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்
நாசர், லிவிங்ஸ்டன் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுபிரியா, சரண்யா பிரம்மா ஜிப்ரான் எஸ்.மணிகண்டன்
`36 வயதினிலே' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் புதிய படம் `மகளிர் மட்டும்'.
Chennai
சூர்யாவின் 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

`36 வயதினிலே' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் புதிய படம் `மகளிர் மட்டும்'. சூர்யாவின் 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் இணை தயாரிப்பு நிறுவனம் கிரிஸ் பிச்சர்ஸ். இந்த படத்தில்  ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுபிரியா, சரண்யா இணைந்து நடிக்கிறார்கள்.

இவர்களுடன் நாசர், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற `குற்றம் கடிதல்' படத்தை  அடுத்து இதை  இயக்குனர் பிரம்மா இயக்குகிறார்.

ஒளிப்பதிவு- எஸ்.மணிகண்டன், இசை- ஜிப்ரான், படத்தொகுப்பு-சி. எஸ்.பிரேம், பாடல்கள்-தாமரை, விவேக், உமாதேவி, சவுண்ட்டிசைன்- அந்தோணி பி. ஜெயரூபன், இணைதயாரிப்பு- ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், கிறிஸ்டி சிலுவப்பன், தயாரிப்பு -சூர்யா. எழுத்து, இயக்கம் -பிரம்மா.

ஜோதிகா இந்த படத்தில் ஆவணபட இயக்குனராக நடிக்கிறார். முழுக்க முழுக்க குடும்ப பொழுது போக்கு படமாக இது உருவாகிறது. 1994-ல் கமல்ஹாசன் `மகளிர் மட்டும்' என்ற படத்தை தயாரித்தார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இதில் ரேவதி, ஊர்வசி, ரோகிணி, நாசர் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்போது ஜோதிகா நடிக்கும் இந்த படத்துக்கு `மகளிர் மட்டும்` என்று பெயர் வைக்க கமல் அனுமதி வழங்கி உள்ளார். இதற்காக அவருக்கு  சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.


விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று

வட இந்திய கொள்ளை கும்பலை பிடிக்க போராடும் தமிழக போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.

என் ஆளோட செருப்ப காணோம்

சினிமா விமர்சனம்: என் ஆளோட செருப்ப காணோம் படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.

அறம்

அறம் - ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்ற போராடும் ஒரு பெண் கலெக்டர், நயன்தாரா நடித்த படத்திற்கான விமர்சனம்.

மேலும் விமர்சனம்