படமான மறுஜென்மம் கதை


படமான மறுஜென்மம் கதை
x
நடிகர்: சத்யமூர்த்தி குருதேவ்  டைரக்ஷன்: சத்யமூர்த்தி குருதேவ் இசை: எச்.மொஹமத் அசாருதின் ஒளிப்பதிவு : காந்தி

மறுபிறவியை மையமாக வைத்து `ஆன்மீக அழைப்பு' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் கதையின் நாயகனாக சத்யமூர்த்தி குருதேவ் நடித்து இயக்கி தயாரித்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``மறுபிறவி பற்றிய உண்மைகளை ஆதாரத்துடன் நிரூபிக்கும் வகையில் உண்மை கதையை உள்ளடக்கிய திரைக்கதையில் இந்தப் படம் உருவாகி உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குறுநில மன்னன், தற்போதைய கலிகாலத்தில் மறுபிறவி எடுக்கிறார். வாத்தியாரான அவரது வாழ்க்கையில் மர்மமான விஷயங்கள் நடக்கின்றன. சில அமானுஷ்ய சக்திகள் பயமுறுத்துகிறது.

தொடர்ந்து வாத்தியார் வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களை பரபரப்பான திரைக்கதையோடும், சுவாரஸ்யமான காட்சி களோடும் சொல்வது தான் இந்தப் படம்' என்றார்.

படம் பார்க்கும் ரசிகர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளிக்கும் ஏழு பேருக்கு அரை பவுன் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட உள்ளது'' என்றார்.

இதில் சுபிக்ஷா, ஆதேஷ் பாலா, சிக்கல் ராஜேஷ், கோபிநாத், சதீஷ் வாரியார், புதுமுகம் மீனா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: காந்தி, இசை: எச்.மொஹமத் அசாருதின்.


Next Story