டெல்லியில் போராடும் விவசாயிகள் ஒன்றும் அனாதைகள் இல்லை நடிகர் விவேக் கோபம்


டெல்லியில் போராடும் விவசாயிகள் ஒன்றும் அனாதைகள் இல்லை நடிகர் விவேக் கோபம்
x
தினத்தந்தி 28 March 2017 10:13 AM GMT (Updated: 28 March 2017 10:13 AM GMT)

இந்திய தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகள் ஒன்றும் அனாதைகள் இல்லை என நடிகர் விவேக் காரசாரமாக விமர்சனம் செய்துள்ளார்

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 15 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உடனடியாக தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலைக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் தங்களது போராட்டத்தை முன்னெ டுத்து செல்கிறார்கள்.

கழுத்தில் தூக்கு கயிற்றை தொங்க விட்டு போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சடலமாக நடித்து காட்டியும் தங்களது  எதிர்ப்பை தெரிவித்தனர். சாப்பாட்டுக்கு கூட தங்களுக்கு வழியில்லை என்பதை உணர்த்தும் வகையில் எலிக்கறி சாப்பிட போவதாக கூறிய விவசாயி கள் எலியை வாயில் கவ்வியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  நேற்று முன் தினம் நடிகர் விஷால், நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டியராஜ் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் சென்று தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

இந்நிலையில் 2 வாரங் களையும் கடந்து நீடிக்கும் விவசாயிகள் போராட்டத் துக்கு இளைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதில் ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல இளைஞர் கள் அனைவரும் விவசாயிகளை காக்க ஒன்று கூட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளை தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர்  இன்று சந்தித்து பேசினர். அப்போது, தங்களது போராட்டத்துக்கான கோரிக்கைகளை அவர்களிடம், போராட்டத்தை  ஒருங்கிணைத்து இருக்கும் அய்யாக்கண்ணு எடுத்துக் கூறினார்.

இந்நிலையில் நடிகரான விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளார்.அதில், முல்லை பெரியாறு, பவானி ஆறு, தாமிரபரணி ஆறு, காவிரி ஆறு, கண்டலேறு, கிருஷ்ணா ஆறு! எல்லோரும் கைவிட்டுவிட்டால் தமிழகம் வாழ்வது எவ்வாறு? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளை அனாதைகள் போல் நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க கூடாது என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story