கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல், ரகானே கேப்டனாக செயல்படுகிறார்


கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல், ரகானே கேப்டனாக செயல்படுகிறார்
x
தினத்தந்தி 25 March 2017 3:26 AM GMT (Updated: 25 March 2017 3:25 AM GMT)

காயம் காரணமாக விராட் கோலி அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால், இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மசாலா,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்டின் முதல் நாளில், பவுண்டரிக்கு ஓடிய பந்தை ‘டைவ்’ அடித்து தடுக்க முயன்ற இந்திய கேப்டன் விராட் கோலி வலது தோள்பட்டையில் காயமடைந்தார். இதனால் ஒரு நாள் முழுவதும் அவர் பீல்டிங் செய்யவில்லை. சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட்டிங் செய்தார். ஆனாலும் ஜொலிக்கவில்லை. முந்தைய 4 தொடர்களில் தொடர்ந்து இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்த விராட் கோலி இந்த தொடரில் முதல் 3 டெஸ்டில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த நிலையில் காயம் முழுமையாக குணமடையாததால் இன்று தொடங்கும் முக்கியத்துவம் வாய்ந்த கடைசி டெஸ்டில் விராட் கோலி ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நீடித்து வந்த நிலையில், விராட் கோலி கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று கேப்டன் சஞ்செய் பாங்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு பதிலாக ரகானே கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story