முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து


முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 20 Oct 2017 3:52 AM GMT (Updated: 20 Oct 2017 3:52 AM GMT)

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சேவாக். அதிரடி மன்னன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட சேவாக் இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

சேவாக் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு சமூக வலைதளம் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்பிளே, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட  பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் சேவாக்கிற்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

Next Story