சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும்: ம.தி.மு.க தீர்மானம்


சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும்: ம.தி.மு.க தீர்மானம்
x
தினத்தந்தி 15 March 2017 10:30 PM GMT (Updated: 15 March 2017 9:22 PM GMT)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. மாவட்ட கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், தணிக்கைக்குழு உறுப்பினர் கார்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் தங்கபாண்டியன், நிர்வாகிகள் மல்லிகா, சுந்தரபாண்டியன், முருகன், நாச்சியப்பன், தீபன் சக்கரவர்த்தி, திருநாவுக்கரசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் கடை

பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:– அவை, தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்ற வைகோவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் துரிதபடுத்த வேண்டும். சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் வரலாற்று குறிப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை காமராஜர் காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story