விருத்தாசலம்–மாத்தூர் இடையே தண்டவாள இணைப்பு பணி: 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


விருத்தாசலம்–மாத்தூர் இடையே தண்டவாள இணைப்பு பணி: 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 22 March 2017 10:12 PM GMT (Updated: 22 March 2017 10:12 PM GMT)

விருத்தாசலம்–மாத்தூர் இடையே இரு வழி அகல ரெயில் பாதை தண்டவாள இணைப்பு பணியின் காரணமாக

திருச்சி,

வருகிற 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:–

பயணிகள் ரெயில்

* மதுரை– விழுப்புரம்–மதுரை பயணிகள் ரெயில் அரியலூர்–விழுப்புரம் இடையே 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.

* விருத்தாசலம்–சேலம்–விருத்தாசலம் பயணிகள் ரெயில் விருத்தாசலம்–முகாசா பரூர் இடையே 28–ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

* பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரெயில் விருத்தாசலம்–காரைக்கால் இடையே 27–ந்தேதி சேவை கிடையாது.

* காரைக்கால்–பெங்களூரு பயணிகள் ரெயில் காரைக்கால்– முகாசா பரூர் இடையே 28–ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்

* திருச்சி–ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் 28–ந்தேதி மாலை 5.15 மணிக்கு புறப்படும்.

* திருச்சி–கடலூர் பயணிகள் ரெயில் 28–ந் தேதி செந்துறைக்கு 30 நிமிடம் தாமதமாகும்.

* சென்னை–குருவாயூர்/தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

* மதுரை–சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 28–ந்தேதி திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

* குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 27, 28–ந்தேதிகளில் திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் மார்க்கமாக செல்லும்.

* சென்னை–மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 28–ந்தேதி விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

ரெயில் போக்குவரத்தில் மாற்றத்தால் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு ஸ்ரீரங்கம், அரியலூர், பெண்ணாடம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் இருந்து மாற்று ஏற்பாடு வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


Next Story