என்ஜினீயரிங் மாணவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள சர்வதேச கருத்தரங்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது


என்ஜினீயரிங் மாணவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள சர்வதேச கருத்தரங்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது
x
தினத்தந்தி 23 March 2017 10:43 PM GMT (Updated: 23 March 2017 10:42 PM GMT)

என்ஜினீயரிங் மாணவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள சர்வதேச அளவிலான கருத்தரங்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.

சென்னை,

மாணவர்கள் அவர்களின் தாய்மொழியில் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் ஆங்கில வழியில் என்ஜினீயரிங் சேர்கின்றனர். எனவே வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சர்வதேச கருத்தரங்கு நடத்த முடிவு செய்தது.

இதற்காக மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய பேராசிரியர்களுக்கு முதலில் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி அண்ணா பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. கருத்தரங்கை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.கணேசன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

எப்படி நடத்துவது?

கிண்டி பொறியியல் கல்லூரி டீன் நாராயணசாமி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டி.வி.கீதா, தூத்துக்குடி அண்ணா பல் கலைக்கழக டீன் ஜெயந்தி, வெளிநாட்டை சேர்ந்த பேராசிரியர்கள் ஜெப், டுனே ஸ்மித் உள்ளிட்டோர் மாணவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள அவர்களுக்கு என்ன பாடங்கள் நடத்தலாம்?, எப்படி நடத்தலாம்? என்று பேசினர். கருத்தரங்கில் ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் தேன் மலர் பாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் ஷோபா, நூர்து ஜோலாணி வரவேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் ஸ்ரீமதி வெங்கடலட்சுமி செய்து இருந்தார்.

கருத்தரங்கு நாளை (சனிக் கிழமை) நிறைவடைகிறது.

Next Story