இருவழி அகல ரெயில்பாதை பணியால் குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்


இருவழி அகல ரெயில்பாதை பணியால் குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்
x
தினத்தந்தி 27 March 2017 10:30 PM GMT (Updated: 27 March 2017 7:07 PM GMT)

அரியலூர் அருகே மாத்தூரில் இருந்து விருதாச்சலம் வரை இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்த பாதையில் தண்டவாள இணைப்பு பணி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் முடிகிறது. இந்தநிலையில் இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணியின் காரணமாக

திருச்சி,

அரியலூர் அருகே மாத்தூரில் இருந்து விருதாச்சலம் வரை இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்த பாதையில் தண்டவாள இணைப்பு பணி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் முடிகிறது. இந்தநிலையில் இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணியின் காரணமாக திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்துக்கு நேற்று பகல் 1.15 மணிக்கு வரவேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக மாலை 3.35 மணிக்கு வந்தது. பின்னர் திருச்சியில் இருந்து 3.40 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல் சென்னையில் இருந்து மாலை 6.30 மணிக்கு திருச்சி வரவேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணிநேரம் தாமதமாக இரவு 7.30 மணிக்கு திருச்சி வந்தது. பின்னர் அந்த ரெயில் திருச்சியில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு சென்றது.


Next Story