மத்திய அரசு துறைகளில் மொழி பெயர்ப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு


மத்திய அரசு துறைகளில் மொழி பெயர்ப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு
x
தினத்தந்தி 24 April 2017 5:08 PM GMT (Updated: 24 April 2017 5:08 PM GMT)

மத்திய அரசு துறைகளில் தேவைப்படும் மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய அரசு அலுவலர் தேர்வு அமைப்பான எஸ்.எஸ்.சி. அமைப்பு, பல்வேறு பணியிடங் களுக்கு தகுதியானவர்களை தேர்வு நடத்தி நியமனம் செய்து வருகிறது. தற்போது ஜூனியர் டிரான்ஸ்லேட்டர், ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர், சீனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர், இந்தி பிரத்யாபக் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய தலைமை செயலகத்தின் அலுவலக மொழிச் சேவை பிரிவு, ரெயில்வே துறை, ஆயுதப்படைப் பிரிவுகள், மத்திய இந்தி பயிற்சி மையம் மற்றும் பிற மத்திய அரசுத் துறைகளில் உள்ள மொழி சார்ந்த பணியிடங்களில் இவர்கள் பணி நியமனம் பெறலாம்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-

விண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 30 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பட்டப்படிப்புடன், முதுநிலை டிப்ளமோ மொழிபெயர்ப்பு படிப்பு ஆகியவை படித்தவர்களுக்கு பணி உள்ளது. சில பணிகளுக்கு அனுபவமும் அவசியமாக கேட்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் விவரித்தல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 5-5-2017-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். பார்ட் -1, பார்ட்-2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முதல் கட்ட விண்ணப்பத்திற்குப் பிறகு, கட்டணம் செலுத்திவிட்டு பார்ட்-2 விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க கடைசிநாள் 5-5-2017
கட்டணம் செலுத்த கடைசிநாள் 8-5-2017
தேர்வு நடைபெறும் நாள் 15-6-2017-ந் தேதி
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssconlie.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Next Story