களக்காடு அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி


களக்காடு அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 13 July 2017 9:00 PM GMT (Updated: 13 July 2017 12:37 PM GMT)

களக்காடு அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பரிதாபமாக இறந்தார். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

களக்காடு,

களக்காடு அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பரிதாபமாக இறந்தார். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

பெண் பலி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு புளியங்குளத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 53) விவசாயி. இவருடைய மனைவி சுசீலா (49). இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

சுசீலாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுசீலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுசீலா பரிதாகமாக இறந்தார்.

மேலும் களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நெல்லை, நாகர்கோவில், களக்காடு ஆகியவற்றில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கை

இதற்கிடையே ஏர்வாடி மருத்துவ அதிகாரி டாக்டர் பிரியதர்ஷினி தலைமையிலான மருத்துவ குழுவினர் மர்ம காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.


Related Tags :
Next Story