தமிழக மருத்துவ துறையில் 744 உதவி மருத்துவர் வேலை


தமிழக மருத்துவ துறையில் 744 உதவி மருத்துவர் வேலை
x
தினத்தந்தி 25 Sep 2017 7:40 AM GMT (Updated: 25 Sep 2017 7:40 AM GMT)

தமிழக மருத்துவ சேவைப் பணிகள் ஆட்தேர்வு வாரியம் சுருக்கமாக எம்.ஆர்.பி. என்று அழைக்கப்படுகிறது.

தற்போது இந்த அமைப்பு பல்வேறு பிரிவுகளில் உதவி மருத்துவர் (அசிஸ்டன்ட் சர்ஜன்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 744 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக கைனகாலஜி பிரிவில் 200 பணியிடங்களும், அனஸ்திசியாலஜி பிரிவில் 136 இடங்களும், பீடியாட்ரிக்ஸ் பிரிவில் 71 இடங்களும், ஜெனரல் மெடிசின் பிரிவில் 51 இடங்களும் உள்ளன.

இவை தவிர அனடாமி, பயோ கெமிஸ்ட்ரி, டெர்மடாலஜி, இ.என்.டி., பாரன்சிக் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, ஆப்தமாலஜி, ஆர்தோபெடிக்க், பார்மகாலஜி, பிசிகல் அண்ட் ரிகேப் மெடிசின், சைகியாட்ரி, ரேடியோ டயக்னாசிஸ், ரேடியோ தெரபி, சோசியல் பிரிவென்டிவ் மெடிசின், டி.பி. அண்ட் செஸ்ட் டிசிஸ் போன்ற மருத்துவ பிரிவுகளிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம்.

கல்வித்தகுதி:

பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் முதுநிலை மருத்துவ படிப்பு, சிறப்பு மருத்துவ படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

கட்டணம்:

பொது பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.750-ம், மற்றவர்கள் ரூ.375-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மருத்துவ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் தேர்வுசெய்யப்பட்டு அடுத்தகட்ட தேர்வுமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-10-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Next Story