ரோபோக்கள் மூலம் விவசாய அறுவடை!


ரோபோக்கள் மூலம் விவசாய அறுவடை!
x
தினத்தந்தி 21 Oct 2017 5:49 AM GMT (Updated: 21 Oct 2017 5:49 AM GMT)

ரோபோக்கள் மூலம் சமீபத்தில் பார்லியையும் விதைத்து, அறுவடை செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

ங்கிலாந்தில் ரோபோக்கள் மூலம் பார்லியை விதைத்து, அறுவடை செய்து விஞ்ஞானிகள் புதுமை படைத்துள்ளனர்.

‘ரோபோ’ எனப்படும் தானியங்கி எந்திரங்களின் ஆதிக்கம் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. 

அந்த வரிசையில், தற்போது விவசாயத்திலும் ரோபோக்கள்            இறங்கிவிட்டன அல்லது இறக்கப்பட்டு விட்டன. பொதுவாக விவசாயத்துக்கு மாடுகளையோ, டிராக்டர்களையோ பயன்படுத்துவார்கள். ஆனால் இங்கிலாந்தில் விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் என அனைத்து விவசாயப் பணிகளையும் ரோபோவைக் கொண்டு மேற்கொண்டிருக்கிறார்கள்.

ரோபோக்கள் மூலம் சமீபத்தில் பார்லியையும் விதைத்து, அறுவடை செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

இங்கிலாந்து ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனாதன் கில் தலைமையிலான குழுவினர் இந்தப் புதுமையைப் புரிந்துள்ளனர். இதன் மூலம் ரோபோக்களை கொண்டு வெற்றிகரமாக விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் புதுமையை நிகழ்த்திய இங்கிலாந்து விஞ்ஞானிகளும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இத்தகைய ரோபோக்கள் மூலம் அதிகளவில் உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும், அதன்மூலம் உணவுப் பஞ்சம் இல்லாத உலகை உருவாக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

நாம்தான் விவசாயம் செய்யத் தயங்குகிறோம். உணவே உண்ணாத ரோபோ கூட வயலில் இறங்கிவிட்டது!

Next Story