தர்மபுரியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தர்மபுரியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 4:19 PM GMT (Updated: 18 May 2022 4:19 PM GMT)

தர்மபுரியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி சந்தைப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், பிரவீன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட அணித்தலைவர்கள் புவனேஷ், இமானுவேல், சங்கீதா, கலர் கண்ணன், மாணிக்கம், கலைச்செல்வன், செபாஸ்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சக்திவேல் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் வெங்கடேசன் கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள சாதனை திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் கிராமங்கள் தோறும் பிரசார கூட்டங்கள், சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கிராமங்கள் தோறும் கட்சி கொடியேற்றி புது உறுப்பினர்களை சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் சிவன், ஐவண்ணன், முரளி, கிருத்திகா, ராஜேந்திரன், நிர்வாகிகள் காவேரி வர்மன், சிவசக்தி, மவுனகுரு உள்ளிட்ட வட்டார, நகர தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் சோபன் நன்றி கூறினார்.

Next Story