கனத்த இதயத்தோடுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் | திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் - அதிமுக.. | பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், அருப்புக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் | விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்பை புறக்கணித்து போராட்டம் | தற்போது நடக்கும் அதிமுக அரசை, யாராலும் அசைக்க முடியாது - நடிகர் ராமராஜன் | மாவட்டந்தோறும் ரஜினி மன்றத்துக்கு மகளிர் அணி தலைவி | அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் மீது தாக்குதல் |

தேசிய செய்திகள்

எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 2 terrorists killed trying to infiltrate

எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

ஜம்மு

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி வழியாக 2 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்றனர். அதை இந்திய ராணுவ வீரர்கள் உரிய நேரத்தில் பார்த்து விட்டனர். அவர்களின் எச்சரிக்கையை மீறி ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் மீதும் துப்பாக்கியால் சுட்டனர்.

இருதரப்புக்கும் இடையே பல மணி நேரமாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களும், ஆயுதங்களும் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கிடப்பதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.