தொடக்க நிலையில் இருந்தே அரசு பள்ளிகளில் ஆங்கிலம் தேவை பிரதமரிடம் செயலாளர்கள் குழு சிபாரிசு


தொடக்க நிலையில் இருந்தே அரசு பள்ளிகளில் ஆங்கிலம் தேவை பிரதமரிடம் செயலாளர்கள் குழு சிபாரிசு
x
தினத்தந்தி 16 Jan 2017 2:46 AM GMT (Updated: 16 Jan 2017 2:46 AM GMT)

தொடக்க நிலையில் இருந்தே அரசு பள்ளிகளில் ஆங்கிலம் தேவை என்று பிரதமரிடம் செயலாளர்கள் குழு சிபாரிசு செய்துள்ளது.


புதுடெல்லி

அரசு பள்ளிகளில் தொடக்க நிலையில் இருந்தே ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்த அறிக்கையில், மத்திய அரசின் செயலாளர்கள் குழு சிபாரிசு செய்துள்ளது. பிரதமர் அமைத்த இக்குழு, பல்வேறு ஏழை பெற்றோரை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தது.

அப்போது, சிறப்பான எதிர்காலத்துக்கு ஆங்கிலம் அவசியம் என்று குறிப்பிட்ட ஏழை பெற்றோர், ஆங்கிலக்கல்வி கற்பிக்கும் தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க இயலாது என்பதால், அரசு பள்ளிகளில் தொடக்க நிலையில் இருந்தே ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறியதாக செயலாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

மேலும், கற்கும் திறன் மேம்பட ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், பாடத்திட்டத்தில் யோகா அல்லது விளையாட்டை சேர்க்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது.


Next Story