டெல்லியில் கடும் பனிப்பொழிவு: 17 ரயில்கள் தாமதம் ,2 ரயில்கள் ரத்து


டெல்லியில்  கடும் பனிப்பொழிவு: 17 ரயில்கள் தாமதம் ,2 ரயில்கள் ரத்து
x
தினத்தந்தி 16 Jan 2017 3:23 AM GMT (Updated: 16 Jan 2017 3:23 AM GMT)

வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 17 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அதிகாலை வேளையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் சாலை, ரயில்,விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் இன்று 17 ரயில்கள் தாமதம் அடைந்துள்ளன. அதேபோல் 6 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்பொழிவால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றதை காண முடிந்தது. இம்மாதம் இறுதி வரை பனி மூட்டம் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story