ஆறு மாதங்களுக்கு பிறகு குஜராத் திரும்பினார் ஹர்திக் படேல்


ஆறு மாதங்களுக்கு பிறகு குஜராத் திரும்பினார்  ஹர்திக் படேல்
x
தினத்தந்தி 17 Jan 2017 9:23 AM GMT (Updated: 17 Jan 2017 9:37 AM GMT)

நீதிமன்ற உத்தரவுப்படி ஆறு மாதங்கள் குஜரத்தை விட்டு வெளியேறிய ஹர்திக் படேல் இன்று 6 மாத கெடு முடிந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் இன்று குஜராத் திரும்பினார்.

உதய்பூர்,

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். . இந்த போராட்டத்துக்கு ஹர்திக் படேல் என்ற இளைஞர் தலைமை தாங்கினார். இவர் கடந்த ஆண்டு  அகமதாபாத்தில் நடத்திய  பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் அம்மாநிலத்தில் பல நாட்களுக்கு பதற்றம் நிலவியது.

இதையடுத்து, ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 9 மாதங்களுக்கு  பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஹர்திக் படேல், 6 மாதங்களுக்கு மாநிலத்தில் இருக்க கூடாது என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், குஜராத்தை விட்டு வெளியேறி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ஹர்திக் படேல் தங்கியிருந்தார். 

இந்த நிலையில், நீதிமன்றம் அளித்த கெடு முடிவடைந்ததையடுத்து, இன்று தனது ஆதரவாளர்களுடன் நான்கு கார்கள் புடைசூழ குஜாராத் மாநில எல்லை வந்தடைந்தார். எந்த விரும்பத்தகாத  சம்பவங்களும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Next Story