‘கை’ சின்னத்தை முடக்க வேண்டும் தேர்தல் கமி‌ஷனிடம் பா.ஜனதா மனு


‘கை’ சின்னத்தை முடக்க வேண்டும் தேர்தல் கமி‌ஷனிடம் பா.ஜனதா மனு
x
தினத்தந்தி 18 Jan 2017 1:50 PM GMT (Updated: 18 Jan 2017 1:50 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாலும் ‘கை’ சின்னத்தை முடக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் பா.ஜனதா மனு அளித்துள்ளது.

புதுடெல்லி, 

மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் புபேந்தர் யாதவ், அனில் யாதவ், சித்தார்த் நாத் சிங் ஆகியோர் அடங்கிய பா.ஜனதா குழு, தேர்தல் கமி‌ஷனில் காங்கிரசுக்கு எதிராக புகார் மனு அளித்தது.

அதில், சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கருத்தரங்கில் பேசிய அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசின் தேர்தல் சின்னமான கையை, பல்வேறு மத கடவுள்களுடன் தொடர்புபடுத்தி பேசியதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, மத அடிப்படையில் ஓட்டு கேட்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியதாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாலும் ‘கை’ சின்னத்தை முடக்க வேண்டும் என்று அம்மனுவில் பா.ஜனதா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தேர்தலுக்கு மதச்சாயம் பூச முயற்சிக்கும் காங்கிரஸ் மீதும், ராகுல் காந்தி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story