ரூ.251–க்கு செல்போன் தருவதாக அறிவித்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனர் மோசடி புகாரில் கைது


ரூ.251–க்கு செல்போன் தருவதாக அறிவித்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனர் மோசடி புகாரில் கைது
x
தினத்தந்தி 23 Feb 2017 10:15 PM GMT (Updated: 23 Feb 2017 10:15 PM GMT)

‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற நிறுவனம் ‘பிரீடம் 251’ என்ற பெயரில் ரூ.251–க்கு செல்போன் வழங்குவதாக அறிவித்தது.

காசியாபாத்

‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற நிறுவனம் ‘பிரீடம் 251’ என்ற பெயரில் ரூ.251–க்கு செல்போன் வழங்குவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து சுமார் 7 கோடி பேர் இந்த மொபைலுக்காக ஆன்–லைனில் பதிவு செய்தனர். இந்த அறிவிப்பு பல முன்னணி செல்போன் நிறுவனங்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதில் சதி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலையில் ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனர் மொகித் கோயல் மீது காசியாபாத்தைச் சேர்ந்த அயம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காசியாபாத் போலீசில் புகார் செய்தார். அதில், கடந்த 2015–ம் ஆண்டு ‘பிரீடம் 251’ செல்போனை வினியோகிப்பதற்காக ரூ.30 லட்சத்தை அந்த நிறுவனத்துக்கு அளித்தேன். ஆனால் அவர்கள் ரூ.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே எங்களுக்கு அளித்தனர். மீதி பணத்தை திருப்பி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். என்னிடம் ரூ.16 லட்சத்தை மொகித் கோயல் மோசடி செய்துவிட்டார் என கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மொகித் கோயலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story