மேற்கு வங்கம்: 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் - அமித் ஷா


மேற்கு வங்கம்: 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் - அமித் ஷா
x
தினத்தந்தி 26 April 2017 7:05 PM GMT (Updated: 26 April 2017 7:17 PM GMT)

மேற்கு வங்கத்தில் 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.

கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மமதாவின் தொகுதியான பவானிபூருக்கு விஜயம் செய்த அமித் ஷா அங்குள்ள வாக்குச்சாவடிக்கும் வருகைத் தந்தார். “பவானிபூரிலும் தாமரை மலரும்” என்று அவர் அப்போது கட்சியினரிடையே கூறினார். “மமதாவிற்கு உலகின் பெரிய அரசியல் கட்சி மீதே பயம். இடதுசாரிகள் மீது அல்ல. பாஜகவுக்கு மிரட்டல்களால் பயம் வராது. வேறு எவரும் அதன் மீது மேலாதிக்கம் செலுத்த முடியாது” என்றும் அவர் கூறினார். 

பிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் இம்மாநிலத்திலும் கடந்து போகும். தேர்தலில் அதிக இடங்களை இங்கு பெறுவோம் என்று உறுதியுடன் அவர் கூறினார். மமதாவிற்கு பாஜக மீது மனப்பிராந்தி வந்துள்ளது. இதுவே பாஜகவை மேன்மேலும் வளர வைக்கும் என்றார் அமித் ஷா. மாநிலத்தின் சாரதா, நாரதா ஊழல்களின் ஆதாரங்களுக்கு மமதா பதில் சொல்லட்டும். இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பாஜகவின் சதிகள் இல்லை என்றும் அமித் ஷா கூறினார். ”இடதுசாரிகளின் முப்பதாண்டு தவறான ஆட்சியை நீக்குவதற்கு மமதாவிற்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் ஆறாண்டுகளில் நிலை கெடுதல் என்பதிலிருந்து மோசம் என்றாகிவிட்டது” என்றார் ஷா.

ஆறாண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமார் 2 இலட்சம் கோடியிலிருந்து சுமார் 3.5 இலட்சம் கோடிகளாக உயர்ந்துவிட்டது என்று ஷா சுட்டிக்காட்டினார். பாஜக அரசு வந்த பிறகு 13 ஆவது நிதிக்குழு அளித்ததை விட இருமடங்கு அதிகரித்து மமதா அரசுக்கு 14 ஆவது நிதிக்குழுவின் கீழ் 2 கோடியே 89,000 இலட்சம் அதிகம் கொடுத்துள்ளது. திரிணமுல் காங்கிரஸ் அரசு தனது முதல் மூன்றாண்டுகளை விட இரண்டாவது மூன்றாண்டுகளில் அதிகம் ஆதரவை தேஜகூ அரசிடம் பெற்றுள்ளது எனவும் ஷா குறிப்பிட்டார்.

மாநில அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்ப்பு கள்ளச்சந்தையையும், கள்ள நோட்டு ஆசாமிகளையும் காப்பாற்றும் நோக்கம் கொண்டது என்றார் அமித் ஷா. இதேபோல பங்களாதேஷிலிருந்து வரும் மக்கள் ஊடுருவலையும் மமதா அரசு கண்டு கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டினார் அமித் ஷா.


Next Story