2,500 ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்: உடான் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி


2,500 ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்: உடான் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
x
தினத்தந்தி 27 April 2017 9:31 AM GMT (Updated: 27 April 2017 9:38 AM GMT)

குறைவான கட்டணத்தில் விமான சேவை வழங்கும் உடான் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி சிம்லாவில் இன்று தொடங்கிவைத்தார்.


சிம்லாவில், இன்று உடான் திட்டத்தின் கீழ் இயங்கும் முதல் விமான சேவையைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, 'இனி விமானச் சேவை, அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாறும்' என்று ட்விட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  

உடான் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில், அனைத்து தரப்பு மக்களும் பயணம்செய்யும் வகையில், குறைந்த விமானக் கட்டணம் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ஒரு மணி நேரம் பயண தூரத்தைக்கொண்ட நகரங்களுக்கு,  2 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 500 கிலோ மீட்டர் தொலைவுகொண்ட நகரங்களுக்கு இடையிலான விமானக் கட்டணம்,
2 500  ரூபாய். முதல்நிலை நகரங்கள் வர்த்தகரீதியில் வளர்ந்துவருகின்றன. ஆனால், இந்தியாவில்  உள்ள இரண்டாம் நிலை நகரங்களில், வர்த்தக நடவடிக்கைகள் பின் தங்கி இருக்கின்றன. உடான் திட்டத்தின் மூலம் விமானச் சேவை விரிவுபடுத்தப்பட்டு,  வர்த்தக நடவடிக்கைகள் இரண்டாம் நிலை நகரங்களை எளிதில் அணுகும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

உடான் திட்டத்தில், இரண்டாம் நிலை நகரங்களை விமானப் போக்குவரத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நகரங்களில், மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படும் 12 விமான நிலையங்கள் மற்றும்  பயன்படுத்தப்படாமல் உள்ள 31 விமான நிலையங்கள் உள்பட மொத்தம் 70 விமான நிலையங்களை இணைக்கும் வகையில், 128 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.



Next Story