ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள்


ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள்
x
தினத்தந்தி 27 April 2017 11:43 AM GMT (Updated: 27 April 2017 11:42 AM GMT)

ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.


மும்பை:

ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் இலவசங்களை தொடர்ந்து குறைந்த விலையில் சலுகைகளை ஏப்ரல் 16-ந்தேதி முதல் வழங்கி வருகிறது. இலவசங்களை தொடர்ந்து சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் சலுகைகளை அறிவித்து, பின் டிராய் விதிமுறைகளின் கீழ் அவற்றை திரும்பப் பெற்றது. இதைத் தொடர்ந்து ஜியோ டண் டணா டண் என்ற பெயரில் இரண்டு சலுகைகளை ரூ.309 மற்றும் ரூ.509 விலையில் வழங்கி வந்தது.  
 
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. மொத்தம் பத்து பிரீபெயிட் மற்றும் மூன்று போஸ்ட்பெயிட் திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது. திட்டங்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பிரீபெயிட் திட்டங்களின் விலை ரூ.19-இல் துவங்கி ரூ.9,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போஸ்ட்பெயிட் கனெக்ஷன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.309, ரூ.509 மற்றும் ரூ.999 விலையில் வழங்கி வருகின்றன. அனைத்து பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளுக்கு இலவச சந்தா வழங்கப்படுகிறது. 

ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டங்களின் கீழ் ரூ.19க்கு பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 1-நாள் வேலிடிட்டியுடன் 200 எம்பி டேட்டாவும், பிரைம் திட்டத்தில் சேராதவர்களுக்கு 100 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. ரூ.49 திட்டத்தில் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாள் வேலிடிட்டி, 600 எம்பி டேட்டாவும், பிரைம் திட்டத்தில் சேராதவர்களுக்கு 300 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

ரூ.99 திட்டத்தில் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 7ஜிபி டேட்டாவும், பிரைம் திட்டத்தில் சேராதவர்களுக்கு 600 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 1ஜிபி வழங்கப்படுகிறது. அதன் பின் இண்டர்நெட் வேகம் 128 Kbps ஆக குறையும். ரூ.149 திட்டத்தில் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டாவும், பிரைம் திட்டத்தில் சேராதவர்களுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.  

ரூ.309 திட்டத்தின் முதல் ரீசார்ஜூடன் 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டாவும், அடுத்த ரீசார்ஜ்களில் 28 ஜிபி டேட்டா தினமும் 1ஜிபி வீதம் 28 நாட்களுக்கும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரூ.509 திட்டத்தில் 84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தம் 168 ஜிபி வழங்கப்படுகிறது. அடுத்த ரீசார்ஜ்களில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Next Story