‘மோடி சார், எங்களை காப்பாற்றுங்கள்’ ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து பிரதமருக்கு டுவிட் செய்த பயணி


‘மோடி சார், எங்களை காப்பாற்றுங்கள்’  ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து பிரதமருக்கு டுவிட் செய்த பயணி
x
தினத்தந்தி 28 April 2017 5:10 AM GMT (Updated: 28 April 2017 5:10 AM GMT)

ஜெட் ஏர்வேஸ் விமானம் கடத்தப்படுவதாக அச்சம் அடைந்த பயணி ஒருவர் ‘மோடி சார், எங்களை காப்பாற்றுங்கள்,’ என டுவிட் செய்து உள்ளார்.


புதுடெல்லி,


நேற்று வியாழன் கிழமை மும்பையில் இருந்து டெல்லி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானம் கடத்தப்படுவதாக அச்சம் அடைந்து, ஜெய்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டு உள்ளார் பிரதமர் மோடியிடம்.

176 பயணிகளுடன் டெல்லியை நோக்கி சென்ற விமானம் 9W355 மோசமான வானிலையின் காரணமாக ஜெய்பூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. விமானம் ஜெய்பூர் விமான நிலையத்தில் இறங்கியதும் பாதுகாப்பு முகமைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டது. பின்னர் டுவிட் செய்தவரை இறக்கி விசாரணை செய்தது. மும்பையில் இருந்து டெல்லி சென்ற பயணி, “நரேந்திர மோடி சார் நாங்கள் கடந்த மூன்று மணிநேரமாக ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் உள்ளோம், விமானம் கடத்தப்பட்டது போன்று காணப்படுகிறது, எங்களுக்கு உதவிசெய்யுங்கள் 9W355,” என டுவிட் செய்து உள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு முகமைகள் சுதாரித்து நடவடிக்கையில் இறங்கியது.

இவ்விவகாரத்தில் நடைமுறையில் உள்ள வழக்கப்படி, டுவிட் தொடர்பான தகவலானது சிஐஎஸஎப், பிசிஏஎஸ் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடன் பகிர்ந்துக் கொள்ளப்பட்டு உள்ளது என ஜெட் ஏர்வேஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
விமானம் ஜெய்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் குறிப்பிட்ட பயணிடம் அதிகாரிகள் விசாரித்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவருக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெளிவாகவில்லை.

ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் எம்பி பன்சால் பிடிஐக்கு அளித்து உள்ள பேட்டியில் டெல்லியில் தரையிறங்க வேண்டிய 5 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மற்றும் ஒரு ஒமன் ஏர் விமானம் மோசமான வானிலை காரணமாக ஜெய்பூர் திருப்பிவிடப்பட்டு உள்ளது என்றார். 

Next Story