இந்தியாவில் ஊழல் அதிகம் நிறைந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு 3-வது இடம்


இந்தியாவில் ஊழல் அதிகம் நிறைந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு 3-வது இடம்
x
தினத்தந்தி 28 April 2017 6:59 AM GMT (Updated: 28 April 2017 6:59 AM GMT)

இந்தியாவில் ஊழல் அதிகம் நிறைந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்து உள்ளது. கர்நாடகம் முதலிடம் பிடித்து உள்ளது.


புதுடெல்லி,

இந்தியாவில் லஞ்சம், ஊழலால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் தொடர்பாக ஊடக ஆய்வுகள் மையம் என்ற தனியார் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. பொதுப்பணித்துறைகளில் மக்களுக்கு சேவை செய்வதற்காக லஞ்சம், ஊழல் தொடர்பான ஆய்வில் முதல் இடத்தில் கர்நாடக மாநிலமும், 3-ஆம் இடத்தில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது.  20 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை தனியார் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில், கார்நாடகா மாநிலம் 77 சதவீத புள்ளிகள் பெற்று நாட்டிலேயே பொது சேவையை பெறுவதில் ஊழல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதில் முதல் மாநிலம் என்பது தெரிய வந்துள்ளது. 

இதற்கு அடுத்தப்படியாக ஊழலால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் வரிசையில் 74 புள்ளிகளுடன் ஆந்திரா இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 68 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை தமிழகம் பிடித்து உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மராட்டியம் 57 புள்ளிகளையும், ஜம்மு காஷ்மீர் 44 புள்ளிகளையும், பஞ்சாப் 42 புள்ளிகளையும் பெற்று உள்ளது. ஊழலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வரிசையில் அண்டைய மாநிலமான கேரளா 4 புள்ளிகளுடனும்,  இமாச்சல பிரதேசம் 3 புள்ளிகளுடனும் கடைசி இடத்தை பெற்று உள்ளன.

ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்காளம், அசாம், கர்நாடகா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 20 மாநிலங்களில் கிராமம் மற்றும் நகரங்களை சேர்ந்த 3 ஆயிரம் வீடுகளில் ஆயுவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்மதிப்புடைய பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை திரும்ப பெறப்பட்ட நவம்பர் மற்றும் டிசம்பரில் மாதங்களில் மட்டும் லஞ்சம் குறைந்திருப்பதாக மக்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 53 சதவீதம் பேர், அதாவது 3-ல் ஒரு வீட்டைச் சேர்ந்தவர் அரசு திட்டங்களை பெற லஞ்சம் கொடுத்து உள்ளனர் எனவும் ஆய்வில் தெரியவந்து உள்ளது. 

அரசு சேவைகளை பெறுவதற்காக, கடந்த ஓராண்டில் மட்டும் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். 2017-ம் ஆண்டில் இதுவரை ரூ.6,350 கோடி லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.20,500 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதே நிறுவனம் 2005-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் ஊழல் மலிந்த மாநிலமாக பீகார் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் முடிவையடுத்து அரசு துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பதற்கா வழிகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

குடும்பத்தாரர்கள் ரேசனில் பொருட்கள் வாங்கவே, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மற்றும் நீதித்துறையில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர குறந்தப்பட்சம் 20 ரூபாய் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் லஞ்சம் கொடுக்கப்பட வேண்டியது உள்ளது. போலீஸ், பொது விநியோகத்துறை, மின்சாரத் துறை மற்றும் நீதித்துறையில் லஞ்சமானது அதிகரித்து உள்ளதாக மக்கள் கருதுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story