மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு


மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 May 2017 7:10 AM GMT (Updated: 29 May 2017 7:10 AM GMT)

மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.


புதுச்சேரி

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை பிரெஞ்சு கலாச்சாரத்தை கொண்ட மாநிலம். இங்கு பெரும்பாலான மக்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக மாட்டு இறைச்சி உள்ளது. மேலும் தோல் தொழிலிலும் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசின் தடை சட்டத்தை நிச்சயம் அமல்படுத்த மாட்டோம்.

இந்த சட்டத்துக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித் துள்ளன.

அதே போல் புதுவையிலும் மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்த இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம். தேவைப்பட்டால் புதுவையில் மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும். இது சம்பந்தமாக பிரதமருக்கு நான் இன்றே கடிதம் அனுப்ப இருக்கிறேன். இவ்வாறு நாராயணசாமி கூறினார். 

Next Story